இரத்தினபுரி, பலாங்கொடை பகுதியில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 17 வயது மாணவி உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவி உயர் தரம் கற்பதற்கு புதிய பாடசாலையில் இணைத்துக் கொள்ளப்பட இருந்தார். இதன்படி கடந்த 5ம் திகதி புதிய சீருடை தைப்பதற்காக தையல்காரரிடம் சென்றிருந்தார்.
அன்று மாலை வரை மாணவி வீடு திரும்பவில்லை. இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சுயநினைவற்ற நிலையில் 24 வயதுடைய நபருக்கு சொந்தமான வீட்டில் மாணவியை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இதனையடுத்து பலாங்கொட ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மாணவி நேற்று உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


















