உலகம் முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஆறு வாரங்களில் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ள நிலையில், கொரோனா பரவல் நிலைமை மோசமாகிக்கொண்டேசெல்வதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
உலகின் பல நாடுகள் பயணங்களை எளிதாக்கும் வகையில் கொரோனா கட்டுப்பாடுகளை நெகிழ்த்தி வரும் நிலையில், கொரோனா இன்னும் உச்ச நிலையை அடையவில்லை என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
உலகின் பெரும்பகுதியில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை என்று தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் ஏஜன்சியின் டைரக்டர் ஜெனரலான Dr. டெட்ராஸ்அதோனம், கொரோனா பரவல் மோசமாகிக்கொண்டே செல்வதாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஆறு வாரங்களில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை இரு மடங்காகியுள்ளதகா தெரிவித்த அவர், உலகம் முழுவதும் சுமார் 12 மில்லியன் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு இதுவரை 550,000 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.




















