மொரட்டுவை பகுதியில் பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அங்குலானை பிரதேசத்தில் நடந்த இந்த சம்பவத்தில் 39 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை 12.20 அளவில் இந்த சம்பவம் நடந்தது. 3 பொலிசார் திடீர் வீதிச்சோதனையை மேற்கொண்டபோது, முச்சக்கர வண்டியில் வந்தவர்களுடன் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து, பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த ஒருவரே உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.


















