கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் மேலுமொரு கைதி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது நேற்று (10) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கைதிகளின் பி.சி.ஆர் சோதனைகள் 8 ஆம் திகதி நடத்தப்பட்டு அவர் சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று தனது பி.சி.ஆர் சோதனை அறிக்கையைப் பெற்றதாகவும், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது என்றும் சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.
சிறைச்சாலையின் சிகை அலங்கார பகுதியில் பணியாற்றிய கைதியே கொரோனாவினால் பாதிக்கப்பட்டதாகவும், அவர் ஏற்கனவே கொரோனாவினால் அடையாளம் காணப்பட்ட கைதியுடன் ஒன்றாக தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அவரை ஐ.டி.எச் மருத்துவமனைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


















