ஐக்கிய நாடுகள் சபையில் விடுதலைப்புலிகளின் முகாம்களிலும் மனிதப்புதைகுழிகள் இருப்பதாக கூறுமாறு எம்.ஏ சுமந்திரன் வற்புறுத்தியதாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
மனிதப்புதைகுழிகள் என்பது ஸ்ரீலங்காவுக்கு புதிய ஓர் விடயமல்ல. 1995 களில் செம்மணியில் 600இற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொன்று புதைக்கப்பட்டிருந்தனர்.
அன்றைய நிலையில் சர்வதேச அளவில் கூட அது ஒரு முக்கிய பேசு பொருளாக மாறி இருந்திருந்தாலும் பின்னர் அந்த விசாரணைக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை.
தோண்டப்பட்ட புதைகுளிக்குள்ளேயே அதன் நீதியும் மீள புதைக்கப்பட்டு விட்டதென்றே மதியுரைஞர்கள் கூறுகின்றார்கள்.
இத்தகைய நிலையில் சுமந்திரனின் இக்கூற்று தொடர்பில் அனந்தி சசிதரன் எமது ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியின் ஒரு பகுதியே இது,



















