இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 2500ஐ கடந்துள்ளது.
அதனடிப்படையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2511 ஆக அதிகரித்துள்ளது.
இதில் இறுதியாக அடையாளம் காணப்பட்ட நால்வரும ராஜாங்கனை பகுதியை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 1980 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் இலங்கையில் இதுவரை மொத்தமாக 11 கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


















