நேற்று (11) நாட்டில் 57 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்க 2,511ஆக உயர்ந்துள்ளது.
இவர்களில், 30 பேர் கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு நிலையத்துடன் தொடர்புடையவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். புனர்வாழ்வு மையத்தில் இருந்து 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ராஜங்கன பகுதியில் 5 பேரும், ஹபரதுவ, லங்காபுர, வெலிக்கந்த பகுதிகளை சேர்ந்த ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த நான்கு பேரும், குவைத்தைச் சேர்ந்த ஒருவரும் வெளிநாடுகளுக்குச் சென்று நாடு திரும்பியவர்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2511 ஆகும். அவர்களில் 1980 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். தற்போது 520 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


















