கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவியபோதும் முகக்கவசம் அணிவதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தவிர்த்து வந்தார். இந்த நிலையில், நேற்று சனிக்கிழமையன்று முகக்கவசம் அணிந்தபடி சுகாதார பணியாளர்களை சந்தித்துள்ளார்.
வோஷிங்டனுக்கு வெளியே உள்ள ஒரு இராணுவ மருத்துவ நிலையத்தில் காயமடைந்த வீரர்கள் மற்றும் முன்னணி சுகாதாரப் பணியாளர்களைச் சந்திக்க வோல்டர் ரீட் தேசிய இராணுவ மருத்துவ மையத்திற்கு செல்லும்போதே ட்ரம்ப் முகக்கவசம் அணிந்திருந்தார்.
வைரஸின் பரவலை தடுக்க முகக்கவசம் அணியுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியபோதும், ட்ரம்ப் அதை கணக்கிலெடுக்கவில்லை.
இப்பொழுது திடீரென முகக்கவசம் அணிந்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனாவால் வெள்ளிக்கிழமைக்குள் கிட்டத்தட்ட 1,34,000 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.