ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக பல குற்றச்சாட்டுகள் நல்லாட்சி அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ளன.
அதன் அமைச்சரவையில் இருந்த அனைவரும் இதற்கு பொறுப்புக் கூற வேண்டும் என அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அவர்கள் தேசிய பாதுகாப்பை வழங்க முடியாதவர்கள் என சரித்திரத்தில் பேசப்படுவார்கள்.
அவ்வரசாங்கத்திலிருந்த அமைச்சரான விஜேதாச ராஜபக்ஷ மாவனல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவம் மற்றும் சஹ்ரானின் அடிப்படைவாத நடவடிக்கைகள் குறித்து பல சந்தர்ப்பங்களில் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஆனால் அது குறித்து யாரும் அக்கறை எடுக்கவில்லை. அதனால் தாக்குதலை தடுக்க முடியாமல் போனது. 277 உயிர்கள் பலியாகின. 2015, 2016, 2017 மற்றும் 2018ம் ஆண்டுகளில் வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரம் இத்தாக்குதல் காரணமாக மேலும் பாதிப்படைந்தது. என்றும் குறிப்பிட்டுள்ளார்.