யாழ்.கீரிமலை- கூவில் பகுதியில் பழுதடைந்த வெடிபொருள் ஒன்றை பிரிக்க முயன்றபோது அது வெடித்த நிலையில் குறித்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவியிருந்தது.
இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய 4 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் காயமடைந்த 3 பேரும் அடங்குவதாகவும் கூறப்படுகின்றது.
குப்பைக்குள் காணப்பட்ட பற்றியுடன் கூடிய வீரியம் குறைந்த வெடிபொருள் ஒன்றை நால்வரும் கண்டெடுத்து நிலையில் அதனை வெட்டி நெருப்பு வைத்த போது அது வெடித்துள்ளது.
அதன்போது மூவரின் கைகளில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து பொலிஸாரும் இராணுவத்தினரும் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது நால்வரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் விசாரணைகளின் பின்னர் அவர்கள் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.