நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளது.
இந் நிலையில் பஸ் பயணத்தில் சமூக இடைவெளி திரும்பவும் கடைபிடிக்க அறிவித்தால் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தனியார் பஸ் உரிமையார் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பஸ் பயணிகள் பலரும் தனிப்பட்ட வாகனங்களை பயன்படுத்த சென்றுவிட்டதாக குறிப்பிட்ட அவர், பஸ் சேவை நட்டத்தை எதிர்கொள்ள அனுமதிக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.