மொனராகலை மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் பீ.கே. அதிகாரி தெரிவித்துள்ளார்.
இவர்கள் இருவரும் விலஓயா மற்றும் உணட்டுன பிரதேசத்தில் வசித்து வருபவர்கள் எனவும், கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் பாதுகாப்பு அதிகாரிகளாக கடமையாற்றி வருபவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
இவர்களுடன் பழகிய 8 பேர் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 60 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


















