தமிழ் ஊடகவியலாளர்களை இனியும் கொல்லப்போவதாக பிள்ளையான் குழு கூறுகிறது.
கடந்த காலங்களில் தமிழ் ஊடகவியலாளர்களை தாமே கொலை செய்யதாக பிள்ளையான் குழு ஒத்துக்கொண்டுள்ளது.
பிள்ளையான் குழுவை சேர்ந்த குணரத்தினம் உமா ரமணன் என்பவர் தனது முகநூலில் இதனை தெரிவித்துள்ளார்.
தமிழ் ஊடகவியலாளர்கள் புறொக்கர்கள் எனவே அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள் என அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் நடந்த கொலைகள் சரியானவைதான் என நியாயப்படுத்தும் பிரசாரங்களில் பிள்ளையான் குழு ஈடுபடுவது பற்றி மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
எதிர்காலத்திலும் தாம் தமிழ் ஊடகவியலாளர்களை கொலை செய்வோம் என அச்சுறுத்தும் வகையில் பிள்ளையான் குழு பிரசாரங்களை மேற்கொண்டிருப்பது தமிழ் ஊடகவியலாளர்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கியுள்ளது.