கொரோனாவின் எதிரொலியாக ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது.
இதன்படி 8.3 முதல் 13.2 மில்லியன் மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படலாமென ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு நாடுகளிலும் ஊடரங்கு நடைமுறையில் இருந்து வரும் நிலையில் இலட்சக்கணக்கான மக்கள் வேலை மற்றும் வாழ்வாதரத்தை இழந்து அன்றாட உணவுக்கே போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
உலகெங்கிலும் கொரோனா தொற்று நோயால் பட்டினியும், வறுமையும் அதிகரித்து வருவதால் எதிர்காலத்தில் உணவு பற்றாக்குறையால் ஏற்படப்போகும் ஆபத்துகள் குறித்தும் கவலை வெளியிட்டுள்ளது.
கொரோனா நெருக்கடியால் வருமான இழப்பு காரணமாக ஏழை மக்களுக்கு சத்தான உணவு கிடைப்பதில் தடை ஏற்பட்டுள்ளது.
உலக மக்கள் தொகையில் 69 கோடி மக்கள் போதிய உணவு இன்றி பட்டினியை எதிர்கொள்கின்றனர். கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு முன்பே பட்டினியை எதிர்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 60 மில்லியனாக அதிகரித்திருந்தது.
இதன் நிலை அடுத்தடுத்த காலங்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதென ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.