மின்சார கட்டணங்களில் நிவாரணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இன்று கூடிய அமைச்சரவையில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி பெப்ரவரி மாத மின் கட்டணத்தையே மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் பொதுமக்கள் செலுத்த வேண்டும். பெப்ரவரி மாதத்தில் பாவித்த மின் அகு கட்டணங்களே ஏனைய மாதங்களிற்கும் அறவிடப்படவுள்ளது.
இந்த தொகையை செலுத்த 2 மாதங்கள் காலஅவகாசம் வழங்குவதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மின்சார கட்டணத்தை செலுத்தியவர்களிற்கு, பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிட்டு பொறுத்தமான நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பணம் மீள வழங்கப்படும், அல்லது அடுத்துவரும் கட்டணங்களில் கழிக்கப்படும்.