அண்மைக்காலமாக பொதுஜனெ பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரமுகர்கள் சிலர் பகிரங்க மோதலில் ஈடுபடுவதை கடும் தொனியில் விமர்சித்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.
இந்த மோதலில் தீவிரமாக ஈடுபடும் தனது தீவிர விசுவாசியான பிரசன்ன ரணதுங்கவையும் வைத்துக்கொண்டு, நேற்றைய அமைச்சவை கூட்டத்தில் கடுமையான அதிருப்தியை கோட்டா வெளியிட்டுள்ளார்.
கம்பஹா, பொலன்னறுவை, மாத்தறை மாவட்ட பிரமுகர்களே இந்த மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இரு கட்சிகளின் வேட்பாளர்களையும் சேறு பூசுவது, பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சாரத்தை பெரிதும் பாதிப்பதாகவும், உடனடியாக இந்த விதமான மோதல்களை சம்பந்தப்பட்டவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டுமென்றும் தெரிவித்தார்.