பொதுஜன முன்னணிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் மோதல்கள் தொடபில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின்போது ஜனாதிபதி இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்துள்ளார்.
இதன்போது மேலும் குறிப்பிடுகையில்,
பொதுஜன முன்னணிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் முறுகல்கள் ஏற்பட்டு இரண்டு தரப்பினரும் ஒருவருக்கு ஒருவர் சேறு பூசும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேர்தல் பிரச்சாரங்களில் பாதிப்பு ஏற்படும்.
எனவே இந்த சேறுப்பூசல் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று ஜனாதிபதி கடுமையாக உத்தரவிட்டுள்ளார்.
இதன்போது கருத்துரைத்த அமைச்சர் மஹிந்த அமரவீர, வாக்காளர்கள் புத்திசாலிகள் என்ற அடிப்படையில் இவ்வாறான முறுகல்கள் ஏற்பட்டால் அது கட்சியின் தேர்தல் முடிவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.



















