ஜே.ஆர். ஜெயவர்தன அன்று உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு நாட்டின் எதிர்காலத்தை இறுக்கி வைத்திருக்க தொடர்ந்தும் இடமளிக்க முடியாது என முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அண்மையில் தேர்தல் கூட்டமொன்றில் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது பேசிய அவர்,
நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றங்களை செய்வதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் அவசியமில்லை
அரசியலமைப்புச்சட்டத்தில் திருத்தங்களை செய்ய சிறியளவிலான பெரும்பான்மை பலம் போதுமானது எனவும் அவர் கூறியுள்ளார். புதிய அரசியலமைப்புச்சட்டத்தை உருவாக்கும் உடனடியான தேவை இருக்கின்றதா என்பதை அறிய சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல முடியும்.
ஜே.ஆர். ஜெயவர்தன அன்று உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு நாட்டின் எதிர்காலத்தை இறுக்கி வைத்திருக்க தொடர்ந்தும் இடமளிக்க முடியாது.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைக்காது போனால், புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காக சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல முடியும்.
சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி, பெரும்பான்மையான மக்களின் அனுமதியை பெற்று புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கலாம்.
ஜே.ஆர். ஜெயவர்தனவின் ஏணியில் ஏறி மேலே சென்று விட்டு, ஏணியை மேலே எடுத்துக்கொண்டு, கயிறு ஒன்றை போட்டு, கீழே இருப்பவனை ஏறி வருமாறு கேட்பது தார்மீகமானது அல்ல. எப்படியாவது இந்த அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும் என்றார்.



















