கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சராக பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தமிழ் மக்களின் பணத்தில் பல சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தியவர் என தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் தயாமோகன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் கிராமங்களுக்கென ஒதுக்கப்பட்ட பணத்தை சிங்கள மக்களின் நலன்களுக்காக செலவிட்டு இருந்தாரெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை முதலமைச்சர் பதவியை தக்க வைப்பதற்காக பசில் ராஜபக்ஷவின் வேண்டுகோளின் படியே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக எமது ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் இந்த மறைக்கப்பட்ட உண்மைகளை பகிரங்கப்படுத்தியுள்ளார்.
இவ்வாறு மறைக்கப்பட்ட பல விடயங்களுடன் வருகிறது இக்காணொளி,



















