கொழும்பின் புறநகர் பகுதியான அங்குலான பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் நேற்று பெரும் பதற்ற நிலைமை ஒன்று ஏற்பட்டிருந்தது.
பிரதேச மக்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக இந்த பதற்ற நிலைமை ஏற்பட்டது.
அண்மையில் அங்குலான பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு தொடர்பில் பிரதான சாட்சியாளர்கள் இருவரை நேற்று அதிகாலை 5 மணியளவில் பொலிஸ் அதிகாரிகள் சிலர் ஜீப் வண்டியில் கடத்தி சென்றதாக கூறி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரினால் சாட்சியாளருக்கு அழுத்தம் பிரயோகித்து சாட்சிகளை மறைத்து கொலைகளுக்கு தொடர்புடைய முன்னாள் பொலிஸ் அதிகாரியை காப்பாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
நேற்று காலை பிடியாணையின்றி பொலிஸாரினால் அழைத்து செல்லப்பட்ட சாட்சியாளர்கள் இருவர் கல்கிஸ்ஸ மற்றும் மொரட்டுமுல்ல பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து இரகசியமாக அங்குலான பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் மொரட்டுவ, லுனாவ பிரதேசத்தில் வாகன சோதனையில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய நபர்கள் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். இதன் காரணமாக 39 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸ சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் மேற்கொண்ட விசாரணைக்கமைய துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதுவரையில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்திற்கு சாட்சியாளர்களுக்கு அழுத்தம் பிரயோகித்து குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கு பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். அதற்கு எதிர்ப்பு வெளிட்டே ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இதனால் பொலிஸாரினால் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பொலிஸார் கண்ணீர் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 8 பொலிஸார் காயமடைந்தனர். 9 பெண்கள் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


















