சிறுவன் ஒருவன் தனது தங்கையை நாயிடமிருந்து காப்பாற்ற செய்த காரியம் இறுதியில் 90 தையல் போடும் அளவிற்கு சென்றுள்ளது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்ஜர் வாக்கர்(6) என்னும் சிறுவன், தனது தங்கையை துரத்திய நாயிடமிருந்து காப்பாற்றுவதற்கு, நாயின் முன்பு விழுந்துள்ளான்.
இந்த விபத்தில், அந்த நாய் சிறுவன் வாக்கரின் இடது கன்னத்தை கடித்து குதறியதில், தற்போது 90 தையல்கள் போடப்பட்டுள்ளன.
இதுகுறித்த சிறுவன் மற்றும் சிறுவனின் தங்கையின் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்த சிறுவனின் அத்தை இந்த சம்பவம் குறித்து நீளமான பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அதே போல, காயத்துடனும் தங்கையை கை கொண்டு மறைத்து வைத்து காப்பாற்றியதாக பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த விபத்திற்கு பின்னர், ‘எங்களிடையே முதலில் ஒருவர் உயிரிழப்பதாய் இருந்தால் அது நானாக தான் இருக்க வேண்டும்’ என சிறுவன் கூறியுள்ளான்.
இதனை பதிவிட்ட அவரது அத்தை, சிறுவனின் நெகிழ்ச்சியான செயலை அதிகம் பகிர வேண்டும் எனவும், சிறுவனுக்கு ஆதரவான கமெண்ட்களை பதிவு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பான பதிவு, இணையதளங்களில் அதிகம் வைரலான நிலையில் கடினமான நிலையிலும், தனது தங்கையை காத்துக் கொள்ள சிறுவன் எடுத்துக் கொண்ட ஆபத்தான முயற்சியால் பலரும் நெகிழ்ந்து போயுள்ளனர்.