கொரோனா மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தினை மட்டுமின்றி பல உயிர்களைப் பறித்தும் வருவதால் மக்கள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவுகளை அதிகமாக சாப்பிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த கடக்நாத் கோழிகளுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
இதில் அப்படியென்ன ஷ்பெஷல் என்றால், இக்கோழியின் கறி மற்றும் முட்டை அனைத்தும் கருப்பு கலரிலேயே இருக்குாம். இந்த கோழிக்காக சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் என இரண்டு மாநிலத்திற்கு இடையே மிகப்பெரிய பஞ்சாயத்து ஏற்பட்டு பின்பு, இறுதியில் மத்திய பிரதேசத்திற்கே இக்கோழி சொந்தமாகியுள்ளது.
இதையடுத்து இந்த கோழிகளை மத்திய பிரதேச மாநிலம் இந்தியாவின் மூலை, முடுக்குகளில் எல்லாம் கொண்டு சேர்க்க ஆரம்பித்து உள்ளது. அந்த வகையில் தமிழகத்திலும் கடக்நாத் கோழிகளை இறைச்சி, முட்டைகளுக்காக வளர்க்க ஆரம்பித்து இருக்கின்றனர்.
இதுகுறித்து மருத்துவர்கள், இந்த கருங்கோழியில் நோய் எதிர்ப்பு சக்தி மிகுதியாக உள்ளது. இதை சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் கட்டுப்படும். இதய நோய்கள் கட்டுக்குள் இருக்கும்.
ஆஸ்துமா, கல்லீரல் பிரச்சினைகளுக்கு மட்டுமின்றி இதன் முட்டைகளும் சிறுநீரக, தலைவலி, ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு மட்மின்றி, பெண்களின் மாதவிடாய் பிரச்சினைக்கு இந்த கருங்கோழிக்கறி சிறந்ததாம்.
இவ்வாறு ஏராளமான நன்மைகள் இருப்பதால் கடந்த ஜனவரி மாதத்தில் கிலோ 450 ரூபாய்க்கு விற்கப்பட்டது தற்போது 1 கிலோ கறி 1000 ரூபாய்க்கும், 1 முட்டை 20 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகின்றது.