ஹோமகம பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் பணிபுரிந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து 41 பொலிசார் உள்ளிட்ட 73 பேர் இன்று தனிமைப்படுத்தல் மையங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ஹோமாகம பொலிஸ் பிரிவில் 11 பொலிசார், பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் பணியாற்றிய 30 பொலிசார், அவர்களுடன் தொடர்பில் இருந்த 30 பேர் தனிமைப்படுத்தல் மையங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கந்தக்காடு தனிமைப்படுத்தல் மையத்தில் பணியாற்றி கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவரின் தாயார் தொற்றிற்குள்ளாகியிருந்தார். அவர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்திற்கு வந்து சென்றிருந்தார்.
அதன் பின்னர் நடத்தப்பட்ட சோதனையில் பெண் பொலிஸ் அதிகாரியொருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.
அவருடன் தொடர்பில் இருந்த 30 நபர்களே தனிமைப்படுத்தப்பட்டனர்.