பொதுத் தேர்தல் தொடர்பான சுகாதார வழிகாட்டுதல்களைக் கொண்ட விசேட வர்த்தமானி அறித்தல் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது.
அசாதாரண அரசிதழ் அறிவிப்பு எண் 2184/34, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி அவர்களால் தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் நோய் தடுப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் சற்று நேரத்திற்கு முன்பு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டுதல்கள் இதில் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இந்த வார ஆரம்பத்தில் தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய சுகாதார வழிகாட்டுதல் அடங்கிய வர்த்தமானி வெளியிடப்படாவிட்டால் ஆகஸ்ட் 5ம் திகதி நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதில் சிக்கல் ஏற்படும் என எச்சரித்திருந்தார்.
அத்துடன், இந்த வாரம் தேர்தல் ஆணைக்குழுவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் பொது சுகாதார ஆய்வாளர்களும் இது குறித்து கவலை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையிலேயே, தற்போது குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.