முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலிக சில்வாவை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவலதுறை தெரிவித்துள்ளது
தனது நண்பர் ஒருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த குற்றம் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக காவல்துறை தெரிpவத்துள்ளது.
தனது தந்தையின் தேர்தல் பிரசாரத்துக்காக நண்பரிடம் மாலிக சில்வா பணம் கோரியிருக்கிறார்.
இதன்போது அவரும் சுவரொட்டிகளை அச்சிட்டு தர சிறிய தொகை பணத்துக்கு இணங்கியுள்ளார். எனினும் ரீ-சேர்ட்டுகளுக்காக ஒரு லட்சம்; ரூபா அவசியம் என்று மாலிக சில்வா நண்பரிடம் கோரியுள்ளார்.
இதனை தன்னால் தரமுடியாது என்று அந்த நண்பர் கூறிவி;ட்டு மாலக சில்வாவை படிப்படியாக தவிர்க்க முயற்சித்தபோது மாலிக சில்வா தமது பேஸ்புக்கில் தமது நண்பரை காணவில்லை என்ற பதிவை செய்துள்ளார்.
இதனை அறிந்த மாலக சில்வாவின் நண்பர் குறித்த பதிவை அகற்றி விடுமாறு கோரியபோது மாலிக சில்வா அதனை அகற்ற முடியாது என்றுகூறி நண்பருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக கடுவெல நீதிமன்றத்தில் நேற்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதனையடுத்து நண்பருக்கும் அவருக்கும் இடையிலான தொலைபேசி கலந்துரையாடலை செவிமடுத்த பின்னர் மாலக சில்வாவை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.