நகர மற்றும் கிராம மக்களின் தேவைகள் பூர்த்தியடையும் வகையிலான துறைசார் நடவடிக்கைகளுடன் ஒன்றிணையுமாறு நாட்டிலுள்ள பொறியியலாளர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கை பொறியியலாளர் நிறுவன உறுப்பினர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே இந்த விடயத்தை அவர் கூறியுள்ளார்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குடிநீர் மற்றும் வீதிப் பிரச்சினைகள் காணப்படுவதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்தவகையில். கண்டி மாவட்டத்தில் பெரும்பான்மையானோர் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இந்த நிலையில் பல்வேறு செயற்றிட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் வெளிநாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள போதிலும், அவை உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எனவே, உள்நாட்டு நிறுவனங்கள் மற்றும் பொறியியலாளர்களைப் பயன்படுத்தி மக்களுக்குத் தேவையான செயற்றிட்டங்களை முன்னெடுக்கத் தயாராவதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.


















