ஸ்ரீலங்காவின் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நாட்டின் தேர்தல் ஆணையத்திற்கு சீன அரசாங்கம் சுமார் 300,000 முககவசங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.
பாடசாலைகள் மீள திறக்கப்படவுள்ள நிலையிலும் எதிர்வரும் ஓகஸ்ட் 5 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையிலும் இந்த அன்பளிபு வழங்கப்பட்டுடுள்“ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சகங்களின் ஒருங்கிணைப்புடன் நாடு முழுவதும் உள்ள 26 பாடசாலைகள் மற்றும் ஐந்து பல்கலைக்கழகங்களுக்கு 189,000 முககவசங்களை தூதரகம் ஒப்படைத்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில், தூதரகம் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் ஆணையத்திற்கு 100,000 முககவசங்களை வழங்கியது.
“சீனாவும் இலங்கையும் கஷ்டத்தையும் துயரத்தையும் பகிர்ந்து கொள்ளும் உண்மையான நண்பர்கள்” என்று தூதரகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கோவிட் 19 ஆரம்பித்த காலத்தில் இலங்கையில் அனைத்து தரப்பு மக்களும் வழங்கிய வலுவான ஒற்றுமையையும் ஆதரவையும் சீனத் தரப்பு எப்போதும் நினைவில் வைத்திருக்கும்.
ஸ்ரீலங்காவில் கோவிட் 19 ஆரம்பமானதிலிருந்து சீனாவிலிருந்து 73,000 க்கும் மேற்பட்ட சோதனை கருவிகள், 3 மில்லியனுக்கும் அதிகமான முககவசங்கள், 210,000 KN95 முகமூடிகள், 54,000 தொற்றுநோய்க்கு எதிரான பிபிஇ கவுன்கள், 41,000 கண் கண்ணாடிகள் மற்றும் 145,000 மருத்துவ கையுறைகள் வழங்கப்பட்டதாக தூதரகம் தெரிவித்துள்ளது.
சீனாவின் இந்த நன்கொடைகள் இலங்கை மக்களின் ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் பங்களிக்கும் என்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று நட்பை மேம்படுத்தும் என்றும் தூதரகத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.