நல்லாட்சி அரசாங்கத்தின் கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் பழிவாங்கல்கள் மட்டுமே நடைபெற்றதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பு கம்சபா சந்தி விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஒரு அரசாங்கம் சிறந்த செயல்களை செய்திருந்தால் அதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது அடுத்து ஆட்சிக்கு வரும் அரசாங்கத்தின் கடமை.
எனினும் கடந்த நான்கரை ஆண்டுகளாக நாடு பாரிய பின்னடைவை தான் சந்தித்துள்ளது.
நல்லாட்சி அரசாங்கம் தான் உட்பட தனது குடும்பத்தினரை அரசியல் ரீதியாக பழிவாங்கியதை மாத்திரமே செய்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.



















