பிரித்தானியாவில் மருத்துவமனை ஒன்றில் நடந்த கத்தி குத்து சம்பவத்தில் 30 வயது மதிக்கத்தக்க நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவின் Brighton-ல் இருக்கும் Royal Sussex County மருத்துவமனையில் காலை உள்ளூர் நேரப்படி நபர் ஒருவர் கத்தி குத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், சரியாக காலை உள்ளூர் நேரப்படி 8.42 மணியளவில் பொலிசாருக்கு இந்த கத்தி குத்து சம்பவம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து துப்பாகியுடன் மருத்துவமனைக்கு பொலிசார் விரைந்துள்ளனர். அதன் பின் அதற்கு அருகில் இருக்கும் அவென்யூவில், காலை 9.40 மணிக்கு இந்த சம்பவம் தொடர்பாக 30 வயது மதிக்கத்தக்க நபரை கைது செய்து காவலில் வைத்துள்ளனர்.
குறித்த சம்பவம் மருத்துவமனையின் 11-வது தளத்தில் நடந்துள்ளது. மருத்துவமனையில் வேலை பார்க்கும் துப்புரவாலாளர் 56 வயது மதிக்கத்தக்க நபர் இந்த கத்தி குத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இது ஒரு பயங்கரவாத தாக்குதலாக இருக்க வாய்ப்பில்லை. அதுமட்டுமின்றி வேறு யாரும் இதில் காயமடையவில்லை, நோயாளிகள், சக ஊழியர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதிப்புக்குள்ளான நபரின் உயிருக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை எனவும், அவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Brighton & Sussex பல்கலைக்கழக மருத்துவமனை மற்றும் என்.எச்.எஸ் அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில், Royal Sussex County மருத்துவமனையில் இன்று காலை ஒரு சம்பவம் நடந்தது, அதில் ஒரு ஊழியர் காயமடைந்தார்.
ஊழியர் உறுப்பினர் ஒரு நிலையான நிலையில் இருக்கிறார். அவர் மருத்துவமனையில் பராமரிக்கப்பட்டு வருகிறார்.
காவல்துறை மற்றும் மருத்துவமனை பாதுகாப்பு ஊழியர்கள் இந்த இடத்தைப் பாதுகாத்துள்ளனர், தற்போது பொதுமக்கள் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்படுவதில்லை, அதே நேரத்தில் வளாகத்தில் தேடுதல் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.




















