நுகேகொடை மேம்பாலத்தில் இடம்பெற்ற விபத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பில் தெரிய வருகையில்,
கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்றை பாதுகாப்பற்ற வகையில் மற்றொரு பேருந்து முந்திச் செல்ல முயற்சித்த போது, எதிரில் வந்த இராணு ஜீப் வண்டியுடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை நுகேகொடை பொலிஸார் நடத்தி வருகின்றமை குறிப்படத்தக்கது.


















