இதுவரை தேர்தல் சட்டங்களை மீறிய மூன்று வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த மூவர் மீதும் வழக்கு தொடரவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.
அத்துடன் அவர்கள் பயன்படுத்திய 2 அரச வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
இதேவேளை இதுவரை மொத்தம் 3871 தேர்தல் முறைப்பாடுகள் உள்ளதாக பொலிஸ் திணைக்களம் கூறியுள்ளது.