விமானத்தைப் பறகக விட்ட முதலாவது ஆள் இராவணன் என்பதை நிரூபிக்க அரசாங்கத்திற்கு “மறுக்கமுடியாத உண்மைகள்” இருப்பதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் முன்னாள் துணைத் தலைவர் சஷி தனதுங்க, தெரிவித்தார்.
இராவண மன்னன் ஒரு மேதை. அவர் தான் முதலில் பறந்தார். அவர் ஒரு விமானியாக இருந்தார். இது ஐதீக கதை அல்ல.இது ஒரு உண்மை.
இது குறித்து விரிவான ஆராய்ச்சி இருக்க வேண்டும். அடுத்த ஐந்து ஆண்டுகளில், இதை நாங்கள் நிரூபிப்போம், என்று அவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
கடந்த ஆண்டு கட்டுநாயக்கவில் நடந்த ஒரு மாநாட்டில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், வரலாற்றாசிரியர்கள், விஞ்ஞானிகள், வல்லுநர்கள் மற்றும் புவியியலாளர்கள் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு விமானம் பறந்ததாக முடிவு செய்தனர்.
இராமாயணத்தைப் பொறுத்தவரை, இராவணன் “புஸ்பக” என்ற விமானத்தைப் பயன்படுத்தினான், அதை விஸ்வகர்மா நிர்மாணித்தான்.
இதிகாசத்தின் பிரகாரம் சீதையைக் கடத்திச் சென்றபோது இராவணன் விமானத்தைப் பயன்படுத்தியிருந்தான் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.