சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் உள்ளிட்ட 17 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இத்தகவலை பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய , சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதியுடனே இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.