ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்துக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்துக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கண்டி – தெல்தெனியவில் நடைபெற்ற பொதுஜன முன்னணியின் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,
நாட்டில் பழமை வாய்ந்த கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியை சஜித் பிரேமதாச இரண்டாக்கியுள்ளார். கட்சியை உடைத்த அவர் நாட்டை உடைப்பதற்கு தயங்கமாட்டார்.
சஜித் பிரேமதாச எப்போதும் தமது தந்தையின் நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்த முயல்கினார். ரணசிங்க பிரேமதாசவின் 1988 – 1989 ஆண்டு காலப் பகுதியிலேயே 60 ஆயிரம் இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள் என்று நினைவுப்படுத்தியுள்ளார்.


















