தேயிலைக்கு பதிலாக வெங்காயத்தை பயன்படுத்தி தேநீர் குடித்து வந்தால் உடலில் உள்ள பல நோய்களுக்கு அருமருந்தாக விளங்கும்.
இது நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் தூக்கமின்மை போன்ற பல சிக்கல்களைக் குறைக்கவும் மிகவும் உதவி செய்யும்.
இந்த அற்புத டீயை எப்படி தயாரிக்கலாம் என்று பார்ப்போம்
தேவையான பொருட்கள்
- வெங்காயம்
- எலுமிச்சை சாறு
- க்ரீன் டீ
இதை எப்படி தயாரிக்க வேண்டும்?
- முதலில் வெங்காயத்தை நன்றாக கழுவி நறுக்கிக் கொள்ளவும், வெங்காயத் துண்டுகளை கொதிக்கும் நீரில் போட வேண்டும்.
- வெங்காயத்தில் இருந்து தண்ணீர் நிறத்தை பெற்ற பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் க்ரீன் டீ பையை கலக்க வேண்டும்.
- இப்போது அதை வடிகட்டி, உங்கள் விருப்பப்படி தேன் சேர்த்து ஆரோக்கியமான வெங்காய டீயை குடிக்க வேண்டும்.
இந்த டீயில் ஏற்படும் நன்மைகள்
- படுக்கைக்கு செல்லும் முன் ஒரு கிளாஸ் வெங்காய டீ குடிப்பது தூக்கத்தைத் தூண்டும். மேலும் இன்சோம்னியா குறைபாட்டை குறைக்கும்.
- நோயெதிர்ப்பு மண்டலத்தை பலமாக வைத்துக்கொள்ள வெங்காய தேநீரை குடிப்பது மிகவும் சிறந்தது.
- வெங்காயத்தில் உள்ள அழற்சி கூறுகள் வீக்கம் மற்றும் வலியைக் குறைக்க உதவி செய்யும். இதனால் வீக்கங்களின் மீது வெங்காயத்தை அழுத்தமாக தேய்ப்பது நல்ல நிவாரணத்தை கொடுக்கும்.
- சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் வெங்காய டீ ஒரு அற்புதமான மருந்து. குறிப்பாக தொண்டைப்புண் இருப்பவர்கள் வெங்காய டீ குடிப்பது அவர்களுக்கு உடனடி தீர்வு கொடுக்கும்.
- வெங்காயத்தில் குவெர்ட்டின் என்னும் கலவை இருப்பதால் புற்றுநோயிலிருந்து சிறப்பான பாதுகாப்பை வழங்கும். இது இரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
- எடையை வேகமாக குறைக்க விரும்புபவர்கள் வெங்காய தேநீரை குடிக்க வேண்டியது அவசியம். இது வயிற்று பகுதியில் இருக்கும் கொழுப்பை வேகமாக குறைக்கும். மேலும் வளர்சிதை மாற்றத்தை 2 வாரங்களில் அதிகரிக்கும்.