இலங்கையின் பயங்கரமான பாதாள உலகக்குழு தலைவர்களில் ஒருவரான அங்கொட லொக்கா என அழைக்கப்பட்ட சந்தன லசந்தா பெரேரா , அவரது காதலியால் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் பெங்களூர் பகுதியில் வாழ்ந்த அங்கொட லொக்கா, கடந்த 3ஆம் திகதி உணவில் வசம் கலக்கப்பட்டு கொல்லப்பட்டதாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அங்கொட லொக்காவுடன் நெருக்கமாக இருந்த அழக்குக்கலைஞரான இளம்பெண் ஒருவர், அவரும் இந்தியாவிற்கு சென்று லொக்காவுடன் வாழ்ந்து வந்தார்.
அங்கொட லொக்காவின் இறுதிச்சடங்குகள் கோயம்புத்தூர் பகுதியில் நடந்துள்ளது.
களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரணலே சமயங் உள்ளிட்ட பாதாள உலகக்குழுவினரை சிறைச்சாலை பேருந்தில் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்ற சமயத்தில், பேருந்தை வழிமறித்து அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இதில் சமயங், சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட 8 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
இதையடுத்து அங்கொட லொக்கா, அவருடன் நெருக்கமாக இருந்த லடியா என்ற சிலாபத்தை சேர்ந்த பெண்ணும், கடல்வழியாக தப்பித்து இந்தியாவிற்கு சென்றனர்.
அங்கொட லொக்கா ஒரு வாரம் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்துள்ளார். நஞ்சூட்டிய காதலி தலைமறைவாகி விட்டார்.
கொளை, கொள்ளை, கப்பம், கட்டப்பஞ்சாயத்து, போதைப்பொருள் கடத்தலில் அங்கொட லொக்கா குழு ஈடுபட்டிருந்தது.