கஜேந்திரகுமார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைக்க முயல்கிறார். தமிழர்களிற்கு இருக்கும் ஒரே கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆசனங்களை குறைக்கும் முயற்சி கவலையளிக்கிறது என உளறிக்கொட்டியுள்ளார், இதுவரை தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், தமிழர்களிற்கும் எதிராக செயற்பட்டு வந்த சிங்கள வேட்பாளரான சாணக்கிய ராகுல் வீரபுரத்திரன்.
மஹிந்த- கோட்டா அணியில் இணைந்து தமிழ் மக்களிற்கு எதிராக செயற்பட்டு வந்த மேற்படி சிங்கள வேட்பாளர், அண்மையில் பணத்தை வீசியெறிந்து கூட்டமைப்பில் ஆசனம் பெற்றிருந்ததை ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்தோம்.
அது வேறவாய், இது நாற வாய் என்பதை போல, இன்று மட்டக்களப்பில் செய்தியாளர் சந்திப்பை நடத்தி உளறிக்கொட்டியுள்ளார்.
“நேற்று யாழ்ப்பாணத்தில் சைக்கிள் கட்சியில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஒரு நேரடி விவாதத்திற்கு வருவதாக முன்வந்து, இறுதியில் ஒதுங்கியதற்கு காரணம், அவர்களிற்கு சொல்வதற்கு அரசியல் கருத்தில்லையென்பதுதான் எனது கருத்து. அதாவது அவர்களின் நிலைப்பாடு என்ன? என்ன செய்யப் போகிறார்கள்? மக்கள் ஏன் வாக்களிக்க வேண்டும் என்பதை மக்களின் முன் வந்து சொல்ல தெரியாதவர்கள், பொதுவான விவாதத்திற்கு கூட வர முடியாமல் உள்ளனர்.
அவர் கட்சித் தலைவர், கட்சித் தலைவருடன்தான் விவாதத்திற்கு போவேன் என நொண்டிச்சாட்டு சொல்கிறார். ஒரு கட்சியென்றால் அதில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராவது இருந்தால்த்தான் அதை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஒரு மாகாணசபை பிரதிநிதித்துவம் கூட இல்லாதவர்கள், ஒரு அடையாளம் கூட இல்லாதவர்கள், அவர்களுடன் எங்கள் பெருந்தலைவர் சம்பந்தன் ஐயா போய் விவாதிப்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
தன்னுடன் விவாதிக்க சம்பந்தன் ஐயா வர வேண்டுமென அவர் எதிர்பார்ப்பது மிக சிறுபிள்ளைத்தனமானது.
மட்டக்களப்பில் 4 ஆசனம் கூட்டமைப்பிற்கு உறுதியாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் 6 ஆசனம் எடுப்பதை குழப்ப முயல்கிறார்கள். இன்று யாழ்ப்பாணத்தில் கஜேந்திரகுமாரின் கட்சியினர், நீங்கள் எந்தக்கட்சிக்கு வாக்களித்தாலும் பரவாயில்லை, கூட்டமைப்பிற்கு வாக்களிக்க வேண்டாமென பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் எமது பிரதிநிதித்துவம் இழப்பது வேதனையாக உள்ளது“ என்றார்.