முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தேவரப்பெரும மீது குழுவினர் நடத்திய தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதலில் அவரது கை, மற்றும் ஒரு காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மத்துகம – வேகந்தல பகுதியில் குடி திட்டம் ஒன்றின் குழாய் பொருத்தும் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய சென்ற போது, ஒப்பந்த நிறுவனத்தின் அதிகாரிகள் உள்ளிட்டவர்களுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை தொடர்ந்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
காயமடைந்த முன்னாள் எம்.பி. இன்று பிற்பகல் களுத்துறை நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் மற்றும் அவரது உடல்நிலை மோசமாக இல்லை என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.