அமெரிக்காவில் அதிபராக பதவியேற்ற முதல் இனவெறியர் டொனால்ட் ட்ர்ம்ப் தான் என ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மத்தியில் வரும் நவம்பர் மாதம் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 100 நாட்களே உள்ள நிலையில் கொரோனவையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில் ஆளும் குடியரசுக் கட்சி வேட்பாளரான அதிபர் ட்ரம்புக்கும், ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடனுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இதனால் இரு வேட்பாளர்களும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் குற்றம்சாட்டி வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எதிர்க்கட்சி வேட்பாளர் ஜோ பைடன், அமெரிக்காவின் அதிபராக பதவியேற்ற முதல் இனவெறியர் ட்ரம்ப் தான் என தெரிவித்தார்.
“மக்கள் தோலின் நிறம், அவர்களின் தேசிய தோற்றம், அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு அதிபர் நடந்துகொள்ளும் விதம் முற்றிலும் வருத்தமளிப்பதாக தெரிவித்தார். இதுவரை அதிபராக இருந்த யாரும் இதைச் செய்யவில்லை. குடியரசுக் கட்சியும் சரி, ஜனநாயகக் கட்சியும் சரி யாரும் செய்ததில்லை ஆனால் முதல் முறையாக இதை அதிபராக உள்ள ட்ரம்ப் செய்திருக்கிறார் என அவர் தெரிவித்தார்.