யாழ். நல்லூர் ஆலய உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் நிலையில் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
நல்லூர் ஆலயத்திற்கு வரும் அடியவர்கள் அடையாள அட்டை கொண்டு வருவது அவசியமென யாழ், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தெரிவித்தார்.
ஆலயத்திற்கு வரும் அடியவர்கள் அனைவரும் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியில் அடையாள அட்டையை காண்பித்தே ஆலயத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படுவர்.
சுகாதார விதிமுறைகளுடன் அ.அட்டை கொண்டு வருவது கட்டாயம் அத்தோடு வெளிநாட்டிலிருந்து வருபவராக இருந்தால் அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டவர் என்ற சான்றிதழை காண்பித்த பின்னரே ஆலயத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்.
அத்தோடு ஆலயத்திற்கு வரும் அடியவர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து ஆலயத்திற்கு வருகை தர வேண்டும்.
அத்தோடு சுகாதார நடைமுறையை பின்பற்றும் முகமாக கைகளை நன்றாகக் கழுவி, உடல் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு அடையாள அட்டையை காண்பித்து அடையாள அட்டை மற்றும் அவர்களது முகம் கமராவில் பதிவு செய்யப்பட்ட பின்னரே ஆலயத்துக்குச் செல்ல அனுமதிக்கப்படுவரென தெரிவித்த பொறுப்பதிகாரி, இம்முறை நல்லூர் உற்சவம் மிகவும் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டு மிகுந்த கட்டுப்பாடுகளுடன் நடைபெறவுள்ள நிலையில் மக்கள் பெருமளவில் ஆலயத்திற்கு வருவதை தவிர்க்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
அருள்மிகு நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் 2020
அருள்மிகு நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் 2020
Publiée par IBC Tamil sur Vendredi 24 juillet 2020