இங்கிலாந்தில் தொலைக்காட்சிகள் மற்றும் இணையதளங்களில் துரித உணவுகளின் விளம்பரங்களை ஒளிப்பரப்ப அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றிலிருந்து ஏற்படும் பாதிப்புகள் மற்றும் மரணங்களுக்கு உடல் பருமன் ஒரு முக்கிய காரணி என்பதை பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளதால் இங்கிலாந்து சுகாதாரத்துறை இதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
இந்நிலையில் துரித உணவுகள் விற்பனைக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க பிரதமர் போரிஸ் ஜோன்சன் தயாராகி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி இரவு 09 மணிக்கு முன்னர் தொலைக்காட்சிகள் மற்றும் இணையதளங்களில் துரித உணவுகளின் விளம்பரங்களை ஒளிப்பரப்ப தடை விதிக்கப்படலாமென அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.



















