மலையக தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பது சம்பந்தமாக அரசாங்கம் என்ற வகையில் தலையீடுகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பதுளை, ஹப்புத்தளையில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
மலையக தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக அதிகரிப்பது சம்பந்தமாக தோட்ட முதலாளிமாருடன் இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளது.
இதனடிப்படையல் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக அதிகரிப்பது தொடர்பாக மீண்டும் தோட்ட முதலாளிமாருடன் பேச்சுவார்த்தை நடத்தி, அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

















