தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனமானது அதன் தலைவர் சீ.வி.விக்கினேஸ்வரனால் இன்று வவுனியாவில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
அதன் முழு விபரம் வருமாறு:
தமிழ் மக்களின் மீதான அடக்குமுறையும் அதற்கெதிரான போராட்டங்களும் சுமார் ஒரு நூற்றாண்டுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. நாடு சுதந்திரம் அடைந்ததன் பின்னர், தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் என்பது அகிம்சை வழியில் முப்பது வருடங்கள் தொடர்ந்தது. 1976ஆம் ஆண்டின் வட்டுக்கோட்டை மாநாட்டிற்குப் பின்னரான ஆயுதப் போராட்டமும் முப்பது வருடங்களைக் கடந்தது.
2009இல் ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர், இன்றுவரை, ஜனநாயக வழியிலான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மாறிமாறி வந்த சிங்கள அரசுகள் தமிழ் மக்களின் உரிமைகளைப் பறித்து வந்தனரே தவிர அவர்களது உரிமைப் போராட்டத்தை உதாசனீம் செய்தே வருகின்றனர். இவர்களின் திட்டமிட்ட இன ஒழிப்பு நடவடிக்கைகளினால், தமிழர்களின் இன விகிதாசாரம் குறைந்து வருவதோடு, கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் தமிழ் இளைஞர்கள் புறக்கணிக்கப்பட்டே வருகின்றனர்.
ஆகவே, நாம் அகிம்சை போராட்டம் தொடர்பாகவும், ஆயுதப் போராட்டம் தொடர்பாகவும் தீர்க்கமாகச் சிந்தித்து, இன்றுள்ள ஜனநாயக வழியை சரிவர நடைமுறைப்படுத்துவது தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் பொறுப்பாகும்.
போரின் கடைசி ஆறு மாதங்களுள் தமிழ் மக்கள் பட்ட அழிவுகளும் அவலங்களும்
(அ) அப்போதைய அரசாங்கம் தமிழ் மக்களின் அழிவைத் திட்டமிட்டு மேற்கொண்டன. முதற்படியாக சர்வதேச அமைப்புகளுடனான தமிழ் மக்களின் தொடர்பைத் துண்டித்தனர். ஐக்கிய நாடுகள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் சுயாதீனமான ஊடகவியலாளர்கள் போன்றோர் போர் நடைபெற்ற இடங்களில் இருந்து விரட்டப்பட்டனர். இதனால் தமிழர்களுக்கு எதிரான சாட்சியமற்ற கொடூரமான அழிப்புகள் நடைபெற்றன.
(ஆ) யுத்தத்தின் போது பாதுகாப்பு வலயங்கள் என்று கூறி (யுத்த சூனிய பிரதேசமாக) அறிவிக்கப்பட்ட இடங்களில் தாக்குதல் நடத்தப்படமாட்டாது என்று அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்து விட்டு அதனையும் மீறி அரச படைகள் அப்பாவி மக்கள் மீது அந்த இடங்களில் பலத்த வான்வழித் தாக்குதலும் எறிகணைத்தாக்குதலும் தரைவழித் தாக்குதல்களும் மேற்கொண்டன. இதனால் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர்.
(இ) யுத்த பிரதேசத்துக்குள் நான்கு லட்சம் வரையிலான மக்கள் அகப்பட்டிருந்த போதும் அன்றைய மகிந்த அரசாங்கம் உலகிற்குப் பொய் உரைத்ததுடன் எழுபதாயிரம் பேருக்கான உணவும் மருந்தமே அனுப்பப்பட்டதால் லட்சக்கணக்கானோர் உணவோ மருந்தோ இன்றி உயிரிழந்தனர்.
(ஈ) யுத்தத்தின் இறுதித் தருணத்தில் பல்லாயிரக் கணக்கானோர் சரணடைந்தார்கள். பல்லாயிரக் கணக்கானோர் தமது குடும்ப உறுப்பினர்களினால் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டனர். இவர்களில் பலர் காணாமல் ஆக்கப்பட்டனர். ஏறத்தாள இத்தகைய இருபத்தையாயிரத்துக்கு மேற்பட்டோர் காணாமலாக்கப்பட்டுள்ளனர். வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பலர் கொலைசெய்யப்பட்டனர்.
விசாரணையின் பின்னர் விடுவிக்கப்படுவார்கள் என்ற படையினர் கொடுத்த வாக்குறுதியை நம்பி மக்கள் குழந்தைகள் உள்ளடங்கிய தமது குடும்பத்தாரோடு சரணடைந்தனர். அப்போதிலிருந்து 11 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. சரணடைந்தோர் இன்றும் காணாமல் ஆக்கப்பட்டோராகவே உள்ளார்கள். இது தொடர்பாக இதுகாறும் எந்தவித விசாரணைகளும் நடத்தப்படவில்லை.
(எ) மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்டோர் ‘மாணிக் பார்ம்’ என்ற தடுப்பு முகாமில் ஒரு வருடத்திற்கு மேல் திறந்த வெளிச்சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். அக்காலகட்டத்தில் கடத்தப்படல், கற்பழித்தல் மற்றும் கொலை செய்யப்படல் போன்ற படையினரின் பல்வேறு தவறான பயன்படுத்தல்களுக்கும் செயல்களுக்கும் அவர்களுள் பலர் உள்ளாக்கப்பட்டார்கள்.
(ஏ) போர்க்காலத்தின் போது போர்க்குற்றங்களும் மனிதத்திற்கெதிரான குறற் ங்களும் புரியப்பட்டன என்று ஐக்கிய நாடுகள் அறிக்கை விடுத்தது. நடுநிலை நிபுணர்கள் பலர் குறித்த குற்றங்கள் இனப்படுகொலையெனக் கணிக்கத்தக்கவை என்று அபிப்பிராயம் விடுத்துளனர்.
(ஐ) இவற்றைத் தொடர்ந்து முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான வடக்கு மாகாண சபை 2015ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ம் திகதியன்று இறுதி யுத்தத்தில் நடைபெற்றது இனப்படுகொலையே என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியது. இத் தீர்மானம் ஐ.நா. சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
போரின் முடிவின் பினன்ரானகாலப் பகுதியில் தமிழ் மக்களின் நிலைமை 2009 மே மாதம் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர்இ தமிழர்களின் நிலைமை வாழ்க்கையின் எல்லா மட்டங்களிலும் பரிதாப நிலையை அடைந்துள்ளது.
(1) தொண்ணூறாயிரம் வரையிலான தமிழ்ப் பெண்கள் போரினால் விதவைகள் ஆனார்கள். போரினால் கணக்கற்ற சின்னஞ்சிறார்கள் அனாதைகள் ஆனார்கள்.
(2) பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் நூற்றுக்கணக்கான தமிழர்கள் சிறைப்படுத்தப்பட்டார்கள். அவர்களுள் பலர் இன்னும் சிறையில் வாடுகின்றார்கள்.
(3) காணாமல் ஆக்கப்பட்டோரின் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசதியற்ற நிலையில் உள்ளார்கள். அவர்கள் தமது குடும்பத் தலைவர்களைப் பறிகொடுத்தது மட்டுமல்லாது பாலியல் ரீதியான வன்கொடுமைகளுக்கும்இ துஸப்pரயோகங்களுக்கும்இ கடத்தல்களுக்கும்; கொலை செய்யப்படுதலுக்கும் முகம் கொடுத்து வருகின்றார்கள்.
(4) தமிழர்களின் வாழ்விடங்கள் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இலங்கையின் வடக்கு கிழக்கில் படையினரின் முகாம்கள் காணும் இடமெல்லாம் நிறைந்து நிற்கின்றன.
(5) படையினர் மக்களின் காணிகளில் குடியிருந்ததால் ஆயிரக் கணக்கானோர் உள்நாட்டில் இடம்பெயர்ந்து முகாம்களில் வாழவேண்டியிருந்தது.
(6) படையினர் மீன்பிடி, விவசாயம் போன்றவற்றில் ஈடுபடுவதாலும் மற்றும் உணவகங்கள், வர்த்தக அமைப்புக்கள், சிற்றுண்டிச்சாலைகள் நடத்தல் போன்ற வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுவதாலும் தமிழ் மக்களின் வாழ்வாதாரங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து வரும் இலங்கை அரசாங்கங்களும் அவற்றின் தலைவர்களும் தொடர்ந்து ஒரு பழக்கமாக தமிழ் மக்கள், இந்திய அரசாங்கம் அதன் தலைவர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் உள்ளடங்கிய சர்வதேச சமூகங்களுக்குத் தாம் கொடுத்த வாக்குறுதிகளை மீறி தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டிய அதிகாரங்களை வழங்காது தமது பொறுப்புக்கூறலில் இருந்து விலகியதாலும், இலங்கையில் தாமாகத் தமிழ் மக்களுக்கு அவர்தம் பாரம்பரிய இடங்களில் ஒரு நியாயமான அதிகாரப் பகிர்வை அவர்கள் வழங்க மாட்டார்கள் என்பதை நன்கு தெரிந்து வைத்துக்கொண்டு, தமிழ் மக்களின் விடிவைப் பெறவிருக்கும் ஒரே வழி சர்வதேச சமூகத்துடன் சேர்ந்து வேலை செய்வதே என்பதை அனுமானித்துக் கொண்டு, சர்வதேச சமூகம் உத்தரவாதம் தரக்கூடிய ஒரு நிரந்தரத் தீர்வை நோக்கியே நாங்கள் செல்ல வேண்டியுள்ளது என்பதை உணர்கின்றோம்.
அதேநேரம் ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டு 11 வருடங்களுக்கு மேலாகியும் வடக்கு கிழக்கில் படையினரின் நியாயமற்ற இருப்பும், அங்கு தொடரும் அவர்களின் முற்றுகையும், வடக்கு கிழக்கில் சிங்கள மயமாக்கல் மற்றும் பௌத்த மயமாக்கல் மிக விரைவாக நடப்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.
தமிழ் மக்களின் பிரச்சினைகள்சர்வதேச மட்டத்திற்குக் கொண்டு போகப்பட்டுள்ளது. அதேவேளை தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவையும் தமிழ்ப் பேசும் மக்கள் சர்வதேச சமூகத்துடன் சேர்ந்து உழைக்க வேண்டிய அவசியமும் இன்று உணரப்பட்டுள்ளது.
ஏன் ஒரு மாற்று அரசியல் அணி தேவை?
தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக விடுதலைப்புலிகளின் அனுசரணையுடன் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கோ அல்லது இனப் படுகொலையினால் பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களின் துன்ப துயரங்களை போக்குவதற்கோ எந்தவிதமான நடவடிக்கைகளையும் கடந்த 11 ஆண்டுகளில் எடுக்கவில்லை.
இலங்கையின் பாராளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கும்இ இனப்படுகொலை குற்றவாளிகளைப் பாதுகாக்கும் வகையிலுமே உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் ஐக்கிய நாடுகள் சபையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது கூடுதலான கவனத்தையும், நேரத்தையும், வளங்களையும் செலவிட்டுள்ளது.
எமது மக்கள் இம்முறை தேர்தலில் மிகுந்த விழிப்புணர்வுடனும் எச்சரிக்கையுடனும் தீர்மானங்களை மேற்கொள்ளவேண்டும் என்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த 11 வருடங்களில் மேற்கொண்ட சில நடவடிக்கைகளை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
1. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தினை மேலும் வலுப்படுத்தி இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை ஒன்றை ஏற்படுத்துவதற்கு மிகவும் பலம்பொருந்திய வாய்ப்புக்கள் நிறைந்த எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைத்தபோதும் அவ்வாறு செய்யாமல் போர் குற்றத்துக்கான சர்வதேச விசாரணை முடிந்து விட்டதாக பிரச்சாரம் செய்ததுடன் ஐ.நா மனித உரிமைகள் சபை தீர்மானத்துக்கு ஒன்றரை வருட கால அவகாசத்தையும் பின்னர் இவ்விரண்டு வருடமாக நான்கு வருட கால நீடிப்பையும் பெற்றுக்கொடுத்து இறுதியில் அதனை மழுங்கடிக்கச் செய்தமை. இதன் மூலம் இனப்படுகொலை குறற் வாளிகளை ஐ. நா மனித உரிமைகள் சபையில் தண்டனையில் இருந்து பாதுகாத்ததுடன் பரிகாரநீதி ஊடாக தீர்வினைப் பெறுவதற்கான வாய்ப்பினையும் மழுங்கடித்தமை.
2. முள்ளிவாய்கால் இனப்படுகொலையை இனப்படுகொலை இல்லை என்று உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பரப்புரை செய்தமை.
3. வட-கிழக்கிலிருந்தான முற்றான இராணுவ வெளியேற்றத்தை சர்வதேச சமூகமும் மனித உரிமைகள் அமைப்புக்களும் வலியுறுத்தி வந்த நிலையில் தனியார் காணிகளில் இருந்து மாத்திரம் இராணுவம் வெளியேறினால் போதுமென்று கூறியமை.
4. கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்ரஸிடம் தாரை வார்த்ததன் மூலம் தமிழ் மக்களுக்கு உரித்தான வேலைவாய்ப்புக்கள் தொடக்கம் பல்வேறுபட்ட சலுகைகளையும் இழந்தமை.
5. வடக்கு மாகாண சபையை இனப்படுகொலை தீர்மானம் நிறைவேற்றியமைக்காக தொடர்ந்து செயற்படவிடாமல் முடக்கியமை, முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்தமை, முதலமைச்சர் நிதியத்தை ஏற்படுத்த ஒத்துழைப்பு வழங்காமை.
6. வவுனியா வடக்கு முதல் முல்லைத்தீவு வரை முன்னெடுக்கப்பட்ட பாரிய சிங்கள குடியேற்றங்களுக்கும் இராணுவ குடியேற்றங்களுக்கும் ஜனாதிபதியுடன் இணைந்து காணி உறுதி வழங்கியமை, பௌத்த விகாரைகள் கட்டப்படுவதற்கும் உடந்தையாக இருந்தமை.
இந்தக் குடியேற்றங்களை நிறுவுவதற்காக யுத்தம் நடைபெற்ற காலங்களை விடவும் மிகவும் பெருமளவு நிதி பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டபோது பாராளுமன்றத்தில் அவற்றுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாரிய ஒரு குற்றத்தை இழைத்துள்ளமை.
7. நாவற்குழி, வவுனியா வடக்கு வெடுக்குநாரிமலை, முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் கோவில், திருக்கேதீஸ்வரம், கிளிநொச்சி பல்கலைக்கழக வளாகம், வலிகாமம் ஆகிய இடங்களில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதற்கும் எமது தலைநகராம் திருகோணமலையில் கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் கோவில் இடிக்கப்பட்டு பௌத்த கோவில் கட்டப்படுவதற்கும் நல்லாட்சி அரசாங்கத்துக்கு எந்த எதிர்ப்பையும் வெளியிடாது ஒத்துழைத்தமை.
8. இலங்கை அரசு செய்த போர்குற்றத்தை மூடி மறைப்பதற்காகவும் அவ்வரசை இனப்படுகொலையில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காகவும் விடுதலைப் போராளிகளும் போர்குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்று பிரசாரம் செய்து அரச பயங்கரவாதத்தையும் விடுதலைப் போராட்டத்தையும் ஒப்பிட்டு சமன் செய்ய முற்பட்டமை.
9. இனப்பிரச்சினைக்கான தீர்வை இலங்கையின் அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்குள் கொண்டு செல்வதாகக் கூறிஇ இனப்பிரச்சினை தீர்வுக்கான பிரத்தியேகமான பேச்சுவார்த்தை வழிமுறைகளை இல்லாமல் செய்தமை.
10. வராத ஒரு தீர்வுக்காக தமிழ்த் தேசியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளான வடக்கு – கிழக்கு இணைப்பு, இறைமை என்பவற்றை கைவிட்டும் ஒற்றையாட்சி என்பதை ஏற்றுக்கொண்டும் மற்றும் பௌத்தத்திற்கு முதல் உரிமை என்பதை அங்கீகரித்தும் தமிழர் தரப்பை பலவீனப்படுத்தியமை.
11. 70 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தமிழ் மக்களின் உரிமை அரசியலை சலுகை அரசியலாக மாற்றியமை. எஸ். ஜே. வி. செல்வநாயகம் மற்றும் தமிழரசு கட்சியின் மூத்த தலைவர்கள் இலங்கையின் சிங்கக் கொடியை நிராகரித்தும் சுதந்திர தினத்தை கரி நாளாகத் தொடர்ந்து பிரகடனப்படுத்தியும் வந்த நிலையில் எதிர்க்கட்சி தலைமைப் பதவியை தக்க வைப்பதற்காகவும் சலுகைகளுக்காகவும் சிங்கக் கொடியை கையில் ஏந்தியதுடன் சுதந்திரதின நிகழ்வுகளிலும் கலந்துகொண்டமை.
12. 11 வருடங்கள் தமிழ் மக்கள் வழங்கிய ஆணைகளை தமது பதவிகளுக்கும் சலுகைகளுக்கும் பயன்படுத்திய பின்னர்இ எதிர்வரும் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பெறப்போவதாக தற்போது வெளிப்படையாக அறிவித்துள்ளமை.
ஏன் நீங்கள் தமிழ் மக்கள் தேசிய கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்?
ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் க. வி. விக்னேஸ்வரன் அவர்களின் தலைமையில் கொள்கை அடிப்படையிலும் புதிய அணுகுமுறையின் அடிப்படையிலும் வடக்கையும் கிழக்கையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளான தமிழ் மக்கள் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கட்சி, ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம், இலங்கைத் தமிழர் முற்போக்கு முன்னணி ஆகியன ஒன்றுசேர்ந்து உருவாக்கியுள்ள ஒரு பெரும் கூட்டுக்கட்சி தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகும்.
ஒழுக்கம், நேர்மை, சலுகைகளுக்கு விலைபோகாத அரசியல் தலைமைத்துவத்தைக் கொண்டதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி திகழ்கிறது. வேட்பாளர்கள் தமது சொத்து விபரங்களை வெளியிடுவது, பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது மாதாந்தப் படிகளில் குறைந்தது 10 சத வீதத்தினை பொதுமக்களின் நலன்களுக்கு வழங்குவது உட்பட பல்வேறு நிபந்தனைகளை இக் கூட்டுக் கட்சிகளின் புரிந்துணர்வு உடன்படிக்கை உள்ளடக்கியிருக்கிறது.
எமது திட்டங்கள் என்ன? அணுகுமுறைகள் என்ன?
இனப்பிரச்சினைக்கான தீர்வு
தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம். இலங்கையின் வடக்கு கிழக்கு அவர்களின் மரபுவழி தாயகம், சுயநிரண்ய உரிமைக்கு அவர்கள் உரித்துடையவர்கள் என்பவற்றின் அடிப்படையில் இணைந்த வடக்கு கிழக்கில் இறைமையுடனான உயர்ந்த மட்ட சுயாட்சியை சமஷ்டி அடிப்படையில் வென்றெடுப்பதே தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நோக்கமாகும்.
நிரந்தர தீர்வுக்கான வழிமுறை மேற்கூறிய தீர்வினை எட்டுவதற்கு இனப்பிரச்சினை தொடர்பில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் மூன்றாந்தரப்பின் மத்தியஸ்தமும் சர்வதேச சமூகத்தின் ஆதரவும் அவசியமானதாகும்.
இதற்கான அரசியல் முன்னெடுப்புகள் பன்முகப்படுத்தப்பட்டு உள்நாட்டிலும் புலம்பெயர் தேசங்களிலும் முன்னெடுக்கப்படவேண்டும்.
தமிழ்த் தேசிய இனத்தின் பிரச்சினைக்கு இணைந்த வடக்கு-கிழக்கில் சமஷ்டி முறைமையிலான ஆட்சிமுறையே நிரந்தரத் தீர்வாக அமையும் என்பதைத் தெரிவிக்கும் வகையில் வடக்கு – கிழக்கு வாழ் தமிழ் மக்களிடம் சர்வதேசசமூகத்தின் அனுசரணையுடன் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இதில் புலம்பெயர் தமிழர்களும் கலந்துகொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
வடமாகாண சபையும் கிழக்கு மாகாண சபையும் ஏற்கனவே இத்தகைய ஒரு மக்கள் தீர்ப்பெடுப்பு வேண்டும் என்று தீர்மானங்களை எடுத்திருக்கின்றன.
அத்துடன் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள 20 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இவ்வாறானதொரு மக்கள் தீர்ப்பெடுப்பு நடத்தப்படவேண்டும் என்ற ஒரு மனுவில் கைச்சாத்திட்டிருக்கின்றார்கள்.
இந்தியாவின் தமிழ் நாடு அரசாங்கம் உட்பட உலகின் பல மாநகர சபைகளிலும் இவ்வாறான மக்கள் தீர்ப்பெடுப்பின் மூலமே இலங்கையில் தமிழ் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காணப்பட முடியும் என்று தீர்மானங்களை எடுத்துள்ளனர்.
ஐ.நா சபையின் பாதுகாத்தலுக்கான பொறுப்பு மற்றும் முரண்பாடுகளுக்கான தீர்வு கோட்பாடுகளுக்கு அமைவாக சர்வதேச சமூகம் இலங்கையின் நீண்ட கால இன முரண்பாட்டுக்கு நிரந்தரமான தீர்வு ஒன்றினை கொண்டுவருவதற்கு ஐ.நா, இந்தியா, பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் தமக்கு இருக்கும் தார்மீக பொறுப்பை ஏற்றுக்கொண்டு தாமதம் இன்றி தலையீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம்.
இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறல் மற்றும் பரிகார நீதி இன அழிப்பு நடைபெற்று 11 வருடங்கள் கடந்துள்ள போதிலும் போர்க்குற்றம், மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றம் மற்றும் இனப்படுகொலைக் குற்றம் ஆகியவற்றுக்கு நீதி கிடைக்கவில்லை.
அதேசமயம்இ ஐ.நா மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்பட்ட 30/1 தீர்மானத்தில் இருந்து இலங்கை அரசாங்கம் விலகுவதாக அறிவித்துள்ளதுடன் எந்த சந்தர்ப்பத்திலும் வெளிநாட்டு விசாரணைக்கோ அல்லது வெளிநாட்டு நீதிபதிகளுக்கோ இடமளிக்கப்படமாட்டாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இலங்கையில் தமிழ் மக்களின் இருப்பை உறுதிசெய்யவும் இனப்படுகொலையில் இருந்து பாதுகாப்பதற்கும் அடுத்த கட்டமாக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டுசென்று நடவடிக்கை எடுப்பதற்கு சட்டரீதியானதும் அரசியல் ரீதியானதுமான எல்லாவிதமான நடவடிக்கைகளையும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி மேற்கொள்ளும்.
எமது இந்த முயற்சியில் இனப்படுகொலை பற்றிய ஆதாரங்களை சேகரித்து ஆவணப்படுத்துவது மிக முக்கியமான ஒரு பணியாகும். இதற்கு நிலத்திலும் புலத்திலும் வாழும் தமிழ் மக்கள் எமது முயற்சிகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றோம்.
வடக்கு – கிழக்கில் சிங்கள குடியேற்றங்கள் மற்றும் பௌத்தமயமாக்கலை நிறுத்துதல் இங்கு நடைபெறும் நில ஆக்கிரமிப்பு மற்றும் பௌத்த மயமாக்கல் நடவடிக்கைகள் சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் பாரிய மனித உரிமை மீறல்களாகும்.
ஐ.நா, சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் ஆகியவற்றின் கவனத்தை இந்த விடயத்தில் ஈர்த்து அவர்கள் இது தொடர்பில் ஆய்வுகளையும் கண்காணிப்பு அறிக்கைகளையும் வெளியிட்டு அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க நடவடிக்கைகளை எடுப்போம்.
அதேவேளை இலங்கை சட்டத்துக்கு உட்பட்ட ரீதியில் மேற்கொள்ளக்கூடிய அனைத்து முயற்சிகளையும் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக நாம் எடுப்போம்.
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் கடந்த காலங்களில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நில ஆக்கிரமிப்பு சம்பந்தமாக காத்திரமான நடவடிக்கைகள் பலவற்றை மேற்கொண்டுள்ளன. இது விடயத்தில் கீழ்வரும் நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வோம்:
1. ஐ. நா மனித உரிமைகள் சபையில் தமிழர் பகுதிகளில் நில ஆக்கிரமிப்பை நிறுத்தும் தீர்மானம் ஒன்றை கொண்டுவருவதற்கு அல்லது ஏற்கனவே இருக்கும் தீர்மானத்தில் இது தொடர்பில் அழுத்தமான உள்ளீடு ஒன்றை கொண்டு வருவதற்கு முயற்சி செய்வோம்;.
2. தொடர்ச்சியாக எமது நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவது தொடர்பிலும் இராணுவமயமாக்கல் நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராய்ந்து நடவடிக்கைகள் எடுப்பதற்கு ஐ.நா வின் விசேட பிரதிநிதி ஒருவர் நியமிக்கப்பட வேண்டியது அவசியமாகியுள்ளது.
ஆகவே இதற்கான முயற்சிகளை முழுவீச்சில் நாம் மேற்கொள்வோம். மக்கள் அங்கீகாரத்துடன் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் இந்த செயற்பாடுகளை மேலும் சிறப்பான முறையில் எம்மால் மேற்கொள்ள முடியும் என்று நாம் நம்புகின்றோம்.
3. நில ஆக்கிரமிப்புக்கு எதிராக செயற்படும் சர்வதேச அமைப்புக்கள்இ ஆய்வாளர்கள் மற்றும் செயற்பாட்டளர்களுடன் இணைந்து உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்ப்போம். தகவல் சேகரிப்பு மற்றும் ஆவண உருவாக்கம் ஆகியவற்றை மேற்கொள்வோம்.
4. தற்காலிக ஏற்பாடாக மாகாண சபையின் காணி பயன்பாட்டுக்காக ஏற்கனவே இருக்கும் அதிகாரத்தை முழுமையாகப் பெறுவதற்கு முயற்சிப்போம். அத்துடன் உள்ளக பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு கிடைக்க வேண்டிய காவல் துறை அதிகாரங்களை பெற்றுக்கொள்ளவும் முயற்சி செய்வோம்;.
உலகில் உச்சளவு இராணுவமயமாக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக வடக்கு- கிழக்கு தொடர்ந்து காணப்படுகின்றது. சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான இராணுவத்தினர் வடக்கில் மட்டும் நிலைகொள்ளச் செய்யப்பட்டுள்ளனர் என்றும் முல்லைத்தீவு பகுதிகளில் ஒவ்வொரு இரண்டு பொதுமக்களுக்கும் ஒரு இராணுவ வீரன் என்ற (2:1) விகிதாசார அளவில் இராணுவமயமாக்கல் காணப்படுவதாகவும் சர்வதேச ரீதியான சில ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கு – கிழக்கு பகுதிகள் அதிகளவில் இராணுவமயப்படுத்தப்பட்டுள்ளமை எமது மக்களின் பாதுகாப்புக்கு பேராபத்தை ஏற்படுத்தியுள்ளது மட்டுமன்றி பொதுமக்களின் நாளாந்த வாழ்க்கையையும் மோசமாக பாதித்துள்ளது.
இதனால் தனியார் காணிகளில் இருந்து மட்டுமன்றி வடக்கு – கிழக்கில் இருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக இருக்கிறது. 1983ஆம் ஆண்டு யுத்தம் ஆரம்பமாவதற்கு முன்னர் இருந்த நிலைகளுக்குள் இராணுவம் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று பாராளுமன்றம், ஐ.நா மற்றும் சர்வதேச மட்டங்களில் நாம் வலியுறுத்துவோம்.
பல வருடங்களாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் பொருட்டு சட்ட வல்லுநர்கள் குழு ஒன்றை அமைத்து அரசியல் கைதிகளின் விடுதலைக்கான எல்லா வழிமுறைகளையும் மேற்கொள்வோம்.
குறிப்பாக பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதற்கு உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பாடுபடுவோம். அதேசமயம் இலங்கை அரசுடன் இவர்களின் விடுதலை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவோம்.
பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்படும் எமது உறுப்பினர்கள் ஐ.நாஇ சர்வதேச நாடுகள், சர்வதேச அமைப்புக்கள், இந்திய அரசு ஆகியவற்றுடன் இது விடயத்தில் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை நடத்துவார்கள்.
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவித முயற்சிகளையும் மேற்கொள்ளாமையினால் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்கள் அடங்கிய ஆவணம் ஒன்றை இவர்களின் விடுதலை தொடர்பிலான எமது செயற்பாடுகளுக்காக தயாரிக்க இருக்கின்றோம்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைகள் தொடர்பில் நாம் மிகுந்த கரிசனை கொண்டுள்ளோம். இவர்களின் பிரச்சினைகளை கையாளும் வகையிலும் சட்டவல்லுனர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரை உள்ளடக்கிய குழு ஒன்றை நாம் அமைக்க இருக்கின்றோம்.
இனப்படுகொலை தொடர்பில் சர்வதேச ரீதியான சுயாதீன விசாரணை ஒன்று நடத்தப்படும் பொழுதே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று நாம் நம்புகின்றோம்.
சுயாதீன சர்வதேச விசாரணையே காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான மர்மங்களை வெளிப்படுத்துவதற்கான திறவுகோலாகும். இதனடிப்படையில் சர்வதேச விசாரணை ஒன்றை இயன்றளவு விரைவாக கொண்டுவருவதற்கு நாம் பாடுபடுவோம்.
அதேவேளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் பிரச்சினைகளை அறிந்து புலம்பெயர் தமிழ் மக்கள் மற்றும் சர்வதேச அமைப்புக்கள் ஆகியவற்றின் உதவியுடன் அவற்றை தீர்ப்பதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம்.
1. வடக்கு – கிழக்கில் தமிழ் மக்கள் பொருளாதாரத்தில் தற்சார்பு நிலையினை அடைய வேண்டும் என்பதும் பொருட்கள், சேவைகளை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு அவர்களின் தொழில்துறைகள் அபிவிருத்தியடைந்துள்ளது.
இதனடிப்படையில் வடக்கு கிழக்கின் பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்தும் வகையில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் தகவல்களை திரட்டுவதற்கும் ஆலோசனைகளை வழங்குவதற்கும் வாய்ப்புக்களை இனங்காண்பதற்கும் நிலத்திலும் புலத்திலும் உள்ள பொருளாதார நிபுணர்களை உள்வாங்கி ‘பொருளாதார ஆய்வு நிலையம்’ ஒன்றை உருவாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
வடக்கு கிழக்கில் நீண்ட மற்றும் குறுகிய கால அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளுவது தொடர்பிலும் அது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்வதும் பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் புள்ளிவிபரங்களைச் சேகரிப்பதும் பேணுவதும் இந்த நிலையத்தின் பிரதான பணிகளாகும்.
2. தொழில்வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் மாகாண சபைஇ மத்திய அரசாங்கம்; வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் புலம்பெயர் மக்களுடன் இணைந்து வடக்கு கிழக்கில் கைத்தொழில் பூங்காக்கள் மற்றும் தொழிநுட்ப பூங்காக்கள் ஆகியவற்றை நாம் ஏற்படுத்துவோம்.
3. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை பொருளாதார ரீதியாக வலுவூட்டும் வகையில் உளவள மற்றும் நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்போம்.
4. பொருட்கள் உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையிலும் கண்டுபிடிப்பு திறனை அதிகரிக்கும் வகையிலான பயிற்சிகள் மற்றும் கற்கைநெறிகளை புலம்பயர் தமிழ் மக்களின் உதவிகளுடன் மேற்கொள்வோம்.
5. கூட்டுறவு முறைமையை மேலும் பலப்படுத்தி சிறுபொருளாதாரத்தை கட்டியெழுப்பும் செயற்திட்டங்களை முன்னெடுப்போம்.
6. பொருளாதாரப் பயிர்களை எமது மக்கள் வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில் மர கன்றுகளையும் விதைகளையும் வடக்கு – கிழக்கு பகுதிகள் முழுவதும் இலவசமாக விநியோகிப்போம். வீட்டுத் தோட்டங்களை அமைக்க நாம் பரந்துபட்ட உதவிகளைப் புரிய இருக்கின்றோம்.
7. வடக்கு கிழக்கின் அரசாங்க வெற்றிடங்களில் தமிழ் மக்களை முன்னிறுத்தி இன விகிதாசாரத்துக்கு அமைவாக நியமிக்கப்படுவதை உறுதி செய்ய முயற்சிகளை மேற்கொள்வோம்.
8. அரசாங்க படைகள் விவசாயம்இ பொருளாதாரம்இ சுற்றுலாஇ வர்த்தகம் போன்ற பொருளாதார செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு எதிராக உள்நாட்டில் முடிந்தளவு நடவடிக்கைகளை எடுப்பதுடன் சர்வதேச ரீதியில் அழுத்தங்களை பிரயோகிக்க நடவடிக்கைகள் எடுப்போம். தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் இதற்கு எதிராக கடுமையாக போராடியிருக்கின்றனர்.
பனை தென்னை வள அபிவிருத்தி
பனை அபிவிருத்திச் சபை மற்றும் பனை தென்னை வள கூட்டுறவு சமாசங்கள் போன்றவற்றின் ஊடாக பனை தென்னை அபிவிருத்திக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் பனை தென்னை உற்பத்தியை நம்பி பல்லாயிரக்கணக்கான மக்கள் அத்துறையில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே இந்த பனை தென்னை வள அபிவிருத்தியை மேலும் ஊக்கப்படுத்துவதுடன் அத் தொழிலை நம்பியிருக்கும் மக்களுக்கு அதற்கான பயிற்சி மற்றும் உதவிகள் என்பன செய்யப்பட்டு பனை தென்னவள அபிவிருத்தி என்பது மேம்படுத்தப்பட வேண்டும்.
கடந்த காலங்களில் பனை அபிவிருத்தி சபையும் அதற்கு கீழிருந்த நிறுவனங்களும் ஊழல்களிலும் மோசடிகளிலும் ஈடுபட்டார்கள் என்பதையும் நாங்கள் குறித்துக் கொண்டு எதிர்காலத்தில் அவ்வாறு நடக்காமல் அத்தொழிலை நம்பியிருக்கும் மக்களுக்கு முழுமையான ஒத்துழைப்புக்களை நாம் வழங்குவோம்.
வடக்கு – கிழக்கில் வீழ்ச்சியடைந்துள்ள கல்வித்தரத்தை உயர்த்தி மீண்டும் அதனை முதல் இடத்துக்கு கொண்டுவருவதற்கான செயற்திட்டங்கள் மற்றும் உயர் கல்வியின் தரத்தை 11 உயர்த்துவதற்கும் கூடுதலான மாணவர்கள் அதனை பெறுவதற்குமான நடவடிக்கைகளில் நாம் கூடுதல் கவனம் செலுத்துவோம்.
1. பாடசாலைகள் மட்டத்தில் எமது மாணவர்களின் கல்வித்தரம் வீழ்ச்சியடைந்துள்ளமைக்கு வறுமை நிலை பிரதான காரணங்களில் ஒன்று என்று அறியப்பட்டுள்ளது. இது தொடர்பில் முழுமையான தகவல்களை திரட்டி எத்தகைய சாத்தியமான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தலாம் என்று ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை நாம் எடுப்போம்.
2. தமிழ் மொழிக் கல்விக்கான கழகம் ஒன்றை அமைக்கும் நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வோம். இதனூடாக, பாடத்திட்டங்கள், கற்றல் உபகரணங்கள், தமிழிலான பாடப் புத்தகங்கள் போன்றவற்றை தயாரிப்பதுடன், ஆசிரிய ஆசிரியைகளுக்கு வலுவூட்டல் வேலைத்திட்டத்தினை நடாத்த ஏற்பாடு செய்வோம்.
3. உரிய தகைமைகள் இருந்தும் தேசிய பல்கலைக்கழகங்களில் இடம் கிடைக்காத மாணவ, மாணவியர்களின் கல்வியைத் தொடர விஞ்ஞானம்இ தமிழர் வரலாறுஇ சுற்றாடல் மற்றும்
தொழிநுட்பம் ஆகியவற்றுக்கான மாகாண பல்கலைக்கழகங்களை வடக்கு கிழக்கில் அமைப்பது அவசியம் என்று உணரப்பட்டுள்ளது. இதனை எவ்வாறு சாத்தியமாக்கலாம் என்பது குறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கைகள் எடுப்போம்.
4. வடக்கு கிழக்கில் எமது தொல்லியல்இ வரலாற்றியல்இ சமூகவியல் சம்பந்தமான தொல்லியல் பொருட்களையும்இ, மனித கைவினைப் பொருட்களையும் அவை பற்றிய பண்டைய ஓலைச்சுவடிகள், நூல்கள் போன்றவற்றை வெளிப்படுத்துவதற்கான அருங்காட்சியகம் ஒன்று நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்படுவது இன்றியமையாதது.
இதனை நிறைவேற்றுவதற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பொருத்தமானவர்களை அடையாளம் கண்டு ஒரு செயற்குழுவை அமைத்து உரிய நடவடிக்கைகள் எடுப்போம்.
5. தமிழக பல்கலைக்கழகங்கள், ஆய்வு நிலையங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி பல்வேறு மட்டங்களில் எமது கல்வி நிலையை மேம்படுத்துவதற்கு வாயப்பு இருக்கிறது. இது கடந்த காலங்களில் முறையாக பயன்படுத்தப்படவில்லை. எதிர்வரும் காலத்தில் இந்த வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்த நாம் ஆவன செய்வோம்.
முன்னாள் போராளிகள் மற்றும் மாற்று வலுவுள்ளோருக்கான நல்வாழ்வு அனைத்தியக்கங்களின் முன்னாள் போராளிகள் மற்றும் மாற்று வலுவுள்ளோரின் பிரச்சினைகள் குறித்து நாம் விசேட கவனம் கொண்டுள்ளோம்.
முன்னாள் போராளிகள் தொடர்பில் அரசாங்கங்கள் எந்த ஒரு வாழ்வாதார திட்டத்தையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. சொல்லொணா துன்ப துயரங்களை இவர்கள் அனுபவித்து வருகின்றார்கள். புலம்பயர் தமிழ் மக்களே கணிசமான உதவிகளை இவர்களுக்கு கடந்த காலங்களில் செயதுள்ளார்கள்.
இவர்களுக்கான விசேடதிட்டம் ஒன்றை தயாரித்து முக்கியமான சில வெளிநாட்டு அமைப்புக்கள் மற்றும்புலம்பெயர் அமைப்புக்களுடன் இணைந்து நடைமுறைப்படுத்த ஆவண செய்வோம்.
க.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்தபொழுது மாகாண அமைச்சானது பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல உதவிகளை வழங்க வந்தது.
இவ்வாறானவர்களுக்கு வேலைவாயப்பு வழங்கும் பொருட்டு புலம்பெயர் நாடுகளில் இருக்கக்கூடிய தமிழ் தொழில் அதிபர்கள் மற்றும் தமிழ் நாட்டு தொழில் அதிபர்கள் ஆகியோரின் பங்களிப்புக்கள் பெறப்பட்டு இவர்களுக்கான வேலைவாய்ப்புக்களை உருவாக்க முயற்சி செய்வோம்.
மகளிர் மேம்பாடும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான நலவாழ்வும் வடக்கு கிழக்கில் வாழ்ந்துவரும் 90,000 பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கில் வாழ்வாதார திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த இருக்கின்றோம். இதற்கு முன்னோடியாக ‘தேவைகள் மதிப்பீடு’ ஒன்றை நாம் விரைவில் நடத்த இருக்கின்றோம்.
பெண்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் நாம் கவனம் கொண்டுள்ளோம். ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம வாய்ப்பு மற்றும் சம சந்தர்ப்பங்கள் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகின்ற போதிலும் உரிய முறையில் இவற்றை அடைவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதில்லை.
பெண்கள் தமது பிரச்சினைகளை தாமே தீர்த்துக்கொள்ள முடியாமல் இருப்பதற்கான முக்கிய காரணம் அவர்கள் கையில் அதிகாரம் இல்லாமல் இருப்பதே ஆகும்.
இதனை நிவர்த்தி செய்வதற்கான வழிகளில் ஒன்றாக அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தலாகும். உட்கட்டுமானங்களை அமைத்தல் அரசாங்கத்திடம் இருந்து பெறக்கூடிய அத்தனை வளங்களையும் பெற்று; அவசியமான உட்கட்டுமானங்களை அமைக்கும் நடவடிக்கைகளை வினைத்திறனுடனான பாராளுமன்ற செயற்பாடுகளின் மூலம் நாம் மேற்கொள்வோம்.
குறிப்பாக நகரங்களையும் கிராமங்களையும் இணைக்கும் பெருந்தெருக்கள், வீதிகள் அமைக்கப்படுவதற்கு எம்மாலான முயற்சிகளை மேற்கொள்வோம்.
முல்லைத்தீவிலும் அதனை அமைப்பதற்காக முழுமையாகப் பாடுபடுவோம். இணைக்கும் நெடுஞ்சாலை வகையில் ஒன்றை ஊடாக விசேடமாக வடக்கையும் கிழக்கையும் திருகோணமலைக்கும் இடையில் அதிவேக நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாகாண அரசுகளின் விவசாயம், மீன்பிடி மற்றும் கால்நடை ஆகிய தொழில்களே எமது மக்களின் பிரதான ஜீவனோபாய தொழில்களாக காணப்படுகின்றன.
விவசாயத் தொழிலை நம்பி மட்டும் ஏறத்தாழ 40 சதவீதமான மக்கள் வடக்கு கிழக்கில் வாழ்கின்றார்கள். அதேபோல, யுத்தம் ஆரம்பமாவதற்கு முன்னர் நாட்டின் மொத்த கடல் உணவு உற்பத்தியில் 40 சதவீதத்தை வட மாகாணம் கொண்டிருந்தது. ஆனால் இன்று 20 சத வீதத்துக்கும் குறைவான கடலுணவையே வட மாகாணம் உற்பத்தி செய்கின்றது.
இதற்கான பிரதான காரணங்களில் ஒன்று ஆழ்கடல் மீன்பிடி மேற்கொள்வதற்கான உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு போதிய முதலீடு இல்லாமல் இருப்பதே ஆகும்.
ஆகவே இந்த மூன்று பிரதான தொழில்துறைகளிலும் நாம் மறுமலர்ச்சி காண்பதற்கு; அதிகளவு முதலீட்டை கொண்டுவருவதுடன் நவீன தொழிநுட்பத்தை உச்ச அளவில் பயன்படுத்தும் நிலையையும் உருவாக்க வேண்டும்.
இவற்றை செய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கக்கூடிய சிறப்பு வரப்பிரசாதங்களை சிறந்த முறையில் நாம் பயன்படுத்துவதுடன் முதலீட்டைப் பெற்றுக் கொள்ளவதற்கு புலம்பெயர் உறவுகள் மற்றும் சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பினையும் பெற்றுக்கொள்ள முயற்சிப்போம்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற பிரதிநிதித்துவம் எமது இந்த முயற்சிகளை இலகுபடுத்தும் சுகாதாரத்துறை விருத்தி வடக்கு கிழக்கில் சுகாதாரத்துறையில் உள்ள பிரதான குறைப்பாடுகளாக கிராமபுறங்களில் போதிய மருத்துவர்கள் இல்லாமல் இருப்பதும் வைத்தியசாலைகளில் போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் இருப்பதும் இனங்காணப்பட்டுள்ளன.
இந்த பிரச்சினைகளை தீர்த்துவைப்பதில் அரசாங்கத்துக்கு முக்கிய பொறுப்பு இருக்கின்ற போதிலும் அரசாங்கம் உரிய கவனம் செலுத்துவதில்லை. புலம்பெயர்ந்து வாழும் எமது தமிழ் மருத்துவர்கள் தனிப்பட்ட ரீதியிலும் அமைப்புக்கள் ரீதியாகவும் இந்த பிரச்சினைகளை போக்குவதில் சிறந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
எதிர்வரும் காலங்களில் இத்தகைய செயற்திட்டங்களை கூடுதல் முயற்சியுடன் மேற்கொள்வதற்கு நாம் பற்றுறுதி கொண்டிருக்கின்றோம். வடக்கு – கிழக்கில் பல்வேறு கிராம பகுதிகளில் வைத்தியசாலைகள் போதிய வைத்தியர்கள் இன்றியும் அடிப்படை வசதிகள் இன்றியும் இருப்பதை அறிந்து கொண்டுள்ளோம்.
இதனால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள். எம்மால் முடிந்தளவுக்கு சில பகுதிகளில் பிரச்சினைகளை ஏற்கனவே தீர்த்துவத்துள்ளோம். வைத்தியசங்கம், பல்கலைகக்ழகம் மற்றும் சுகாதார அதிகாரிகள் ஆகியோருடன் இது தொடர்பில் ஆலோசனைகளை பெற்று அமுல்படுத்தக்கூடிய திட்ட முன்மொழிவு ஒன்றை அரசங்கத்திடம் சமர்ப்பித்து அதனை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்போம்.
எமக்கு கிடைக்கும் சிறிய வாய்ப்பு
மக்களை பயன்படுத்தி எமது மாணவர்கள் தமது திறமைகளை அகில இலங்கை ரீதியிலும் சர்வதேச மட்டத்திலும் வெளிப்படுத்தி பல்வேறு சாதனைகளை புரிந்து வருகின்றார்கள்.
இவர்களுக்கான நவீன வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை இது காட்டுகின்றது. விளையாட்டு அபிவிருத்தி தொடர்பில் கீழ்வரும் செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நாம் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வோம்.
1. உதைபந்தாட்ட திடல்களில் செயற்கையான தட புல பயிற்சி வசதிகளை (வடக்கு கிழக்கில் ஏற்படுத்துவதற்கு எம்மாலான முயற்சிகளை நாம் மேற்கொள்வோம்).
2. தரை இடப்பட்ட துடுப்பாட்ட மைதானங்களை வடக்கு கிழக்கு பகுதிகளில் ஏற்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மாகாண சபை, மத்திய அரசாங்கம் மற்றும் புலம்பெயர் அமைப்புக்களுடன் இணைந்து மேற்கொள்வதுடன் முறையான துடுப்பாட்ட பயிற்சியை கிராமப்புற மாணவர்களும் பெற்றுக்கொள்வதற்கு ஏற்பாடுகளை செய்வோம்.
3. பாடசாலைகள் மற்றும் கழகங்களுக்கு இடையே கூடுதலான எண்ணிக்கையில் தடகள மற்றும் கூட்டு விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கு ஊக்குவித்து ஆதரவு அளிப்போம்.
4. அருகிவரும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளை வளர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்.
5. உள்ளரங்க, வெளியரங்க விளையாட்டுகளை ஊக்குவித்து இளைஞர்களின் உடல், உள ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்