ஆன்லைன் வகுப்பில் சொல்லி கொடுத்த பாடத்தை ஒப்பிக்க சொல்லி தாய் மகனுடன் போராடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனாவின் அச்சுறுத்தல்களால் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்ற தேதியை முடிவு செய்ய முடியாத நிலையில் நாம் இருக்கிறோம்.
அதனால், தனியார் பள்ளிகள் பெரும்பாலானவை ஆன்லைன் வழியே பாடங்கள் நடத்தத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில் சிறுவன் ஒருவர் தாயுடன் கையெடுத்து கும்பிட்டு கதறி அழும் காட்சி ஒன்று வைரலாகி வருகின்றது.