பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கான மாதாந்த குத்தகை கட்டணங்களை செலுத்துவதற்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி 6 மாத காலம் மேலும் சலுகை வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தீர்மானித்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் ஸ்ரீலங்காவில் பல சலுகைகளை அரசாங்கம் வழங்கியிருந்தது.
இந்த நிலையில் பாடசாலை சேவைகளுக்கு மட்டும் மாதாந்த கட்டணங்களை செலுத்துவதற்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை பாடசாலை சேவை வான் உரிமையாளர் சங்கத்தின் வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் விதமாகவே ஜனாதிபதியின் இந்த தீர்மானம் அமைந்துள்ளது.