சஜித்தைப் போன்று நாமும் உங்களைக் கைவிட்டுச் செல்ல மாட்டோம். காணி தருவதாகச் சொன்ன சஜித், காடுகளை அழித்தார். வேலைவாய்ப்பு தருவதாகக் கூறி தற்காலிக நியமனம் கொடுத்தார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
சஜித்தைப் போன்று நாமும் உங்களைக் கைவிட்டுச் செல்ல மாட்டோம். காணி தருவதாகச் சொன்ன சஜித், காடுகளை அழித்தார். வேலைவாய்ப்பு தருவதாகக் கூறி தற்காலிக நியமனம் கொடுத்தார்.
நிதி உதவி தருவதாகத் தெரிவித்து கடன் வழங்கினார். உயரமானவரா, குள்ளமானவரா என பார்த்து தான் விண்ணப்பங்கள் சேகரிக்கப்பட்டன.
இறுதியில் அனைவரும் வீடுகளிலேயே இருக்க நேரிட்டது. ஆகவே அவருக்கு உங்களை நேரில் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அவரால் அமைக்கப்பட்ட கிராமங்களுக்கு செல்லும் போது, எங்களை ஏன் சிரமத்துக்கு உள்ளாக்கினீர்கள் என மக்கள் கேட்கிறார்கள். அவர்களுக்கு பதில் இல்லை.
வேலைவாய்ப்பு பெற்ற இளைஞர்கள் எங்களை இந்த நிலைமைக்கு ஆளாக்கியது ஏன் என அவரிடம் கேட்கிறார்கள். ஆகவே தான், அவர் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தைக் கைவிட்டு, கொழும்புக்குத் தப்பிச் சென்றுவிட்டார் என்றார்.