கருணாவின் கூற்று பாரதூரமானது என நான் பகிரங்கமாகவே கூறியுள்ளேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட வேட்பாளரும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் அபிவிருத்தி கைத்தொழில் மற்றும் விநியோக முகாமைத்துவ அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
பத்திலிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதை தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
கருணா மாத்திரமல்ல, அது இராணுவத்தைச் சேர்ந்த ஒருவராக இருந்தாலும் யுத்தம் நடைபெற்ற வேளையில் தாம் கொன்றவர்களின் எண்ணிக்கையை பகிரங்கமாகக் கூறுவது தவறாகும்.
கருணாவின் கூற்றை எடுத்துக் கொண்டு இன்றும் அன்று போல் அரசியல் இலாபம் பெற முயன்றால் அதற்கு வழிவிட முடியாது.
உண்மையில் நாம் தேசிய சுதந்திர முன்னணியாக இருந்தாலும் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அபேட்சகர்களாகவே மொட்டு சின்னத்தில் போட்டியிடுகின்றோம்.
நாம் எமது கட்சியிலிருந்து 12 பேரின் பெயர்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்புமனு குழுவிடம் கையளித்தோம்.
அவர்கள் அனைவருக்கும் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. மக்கள் மொட்டு கட்சி மூலம் அதிக விருப்பு வாக்குகளை அளித்து எமது உறுப்பினர்களை பாராளுமன்றத்துக்கு மக்கள் அனுப்புவார்கள் என எனக்கு மிகுந்த நம்பிக்கையுள்ளது. என்றார்.