நீதிபதி இளஞ்செழியனின் மனிதாபிமான செயற்பாட்டினை பாராட்டி தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் நீதிபதி இளஞ்செழியனை குறி வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் அவரது மெய்பாதுகாவலரான பொலிஸ் அதிகாரியான ஹேமசந்திர என்பவர் உயிரிழந்தார்.
குறித்த பொலிஸ் அதிகாரி உயிரிழந்த தகனம் செய்யப்பட்ட தினத்தன்று அவரது பிள்ளைகள் இருவருக்கும் தான் தந்தையாக இருப்பேன் என நீதிபதி இளஞ்செழியன் வாக்குறுதி வழங்கியிருந்தார்.
வாக்குறுதிகளை நிறைவேற்றி வரும் நீதிபதி, இம்முறையும் பொலிஸ் அதிகாரியின் நினைவுத்தினமான கடந்த 23ஆம் திகதி சிலாபத்தில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார்.
பிள்ளைகளின் கல்விக்கான தொடர்ந்தும் உதவிகளை மேற்கொண்டு வரும் நீதிபதி அவர்களது போக்குவரத்து வசதிக்காக ஸ்கூட்டர் ஒன்றையும் பொலிஸ் அதிகாரியின் மகளுக்கு பெற்றுக் கொடுத்துள்ளார்.
நீதிபதியின் மனிதாபிமான செயற்பாடு தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியிருந்த நிலையில், சிங்கள ஊடகங்கள் அதனை பாராட்டி செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த செய்தியில் “இப்படியான ஒரு சிறந்த மனிதன் நாட்டிற்கு கிடைத்த அதிஷ்டம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.