ஸ்ரீலங்காவில் முதல் தடவையாக இடம்பெறவுள்ள “லங்கன் பிரிமியர் லீக்” கிரிக்கெட் தொடரை ஆகஸ்ட் 28ஆம் திகதி ஆரம்பிக்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறைவேற்றுக் குழு அனுமதி வழங்கியுள்ளது.
நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாக சபைக் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஆகஸ்ட் 28ஆம் திகதி இந்த தொடரை ஆரம்பித்து செப்டம்பர் 20ஆம் திகதி நிறைவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இத்தொடரில் கொழும்பு, தம்புள்ளை, கண்டி, காலி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களை அடிப்படையாகக் கொண்டே அணிகள் பெயரிடப்பட்டுள்ளன.
23 போட்டிகள் கொண்ட இந்த தொடர் 04 ஸ்ரீலங்காவின் சர்வதேச மைதானங்களில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.