சீனா மீது அமெரிக்கா போர் விமானங்கள் பறந்ததாக பீக்கிங் பல்கலைகழக சிந்தனைக் குழுவொன்று வெளியிட்ட தகவலால் பதற்றம் அதிகரித்துள்ளது.
தூதரக வசதிகளை பயன்படுத்தி சீனா உளவு பார்க்கும் வேலையில் ஈடுபட்டதாக டெக்சாஸின் ஹூஸ்டனில் உள்ள சீனாவின் துணைத் தூதரகத்தை மூட அமெரிக்கா உத்தரவிட்டது.
இதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்காவும் மாறி மாறி தூதரகங்களை மூடி கடும் விமர்சனங்களை முன்வைத்துவரும் நிலையில், இது எதிர்வரும் மாதங்களில் ஒரு ராணுவ மோதலாக உருமாறி விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் ஷாங்காயில் இருந்து 76.5 கி.மீ தூரத்திற்குள் அமெரிக்கா போர் விமானங்கள் பறந்துள்ளதாக பீக்கிங் பல்கலைக்கழக சிந்தனைக்குழு ஒன்று கூறி உள்ளது.
அதாவது P-8A ஷாங்காயிலிருந்து 76.5 கி.மீ தூரத்திற்குள் பறந்தது, மற்ற விமானமான EP-3E புஜியனின் தெற்கு கடற்கரையிலிருந்து 106 கி.மீ தூரத்திற்குள் பறந்தது என்று அறிக்கை தெரிவிக்கிறது.
அமெரிக்க ராணுவ விமானங்கள் ஏப்ரல் மாதத்திலிருந்து பல முறை சீனாவின் வான்வெளிக்கு அசாதாரணமாக வந்துள்ளதாக தென் சீனா மார்னிங் போஸ்ட் அறிக்கை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.